வருமான வரி குறைப்பு.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முன்பு 2.5லட்சம் முதல் 5 லட்சம் வரி 5 சதவீத வரி வதிக்கப்பட்டது.

5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முன்பு 5 முதல் 10லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் 10 முதல் 15லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டது. இப்போது 15லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்குத்தான் 30 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி குறைப்பு சலுகை மிகப்பெரிய திருப்பு முனையாகும். இதன் மூலம் மக்கள் கைகளில் பணம் புழங்கும் என்றும் மக்கள் விரும்பியதை வாங்குவதன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment