Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமா பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆப்பு..! வருமான வரித்துறைக்கு உதவும் சமூக வலைத்தளம்.

cinema-twitter

India | இந்தியா

சினிமா பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆப்பு..! வருமான வரித்துறைக்கு உதவும் சமூக வலைத்தளம்.

அரசை ஏமாற்றி வரியை செலுத்தாமல் சுகமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நபர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. அதாவது வருமான வரித்துறை பழைய விசாரணை முறையை மாற்றி தற்போது இந்த காலத்திற்கு ஏற்றார்போல விசாரணை களத்தில் குதித்துள்ளது. இந்த விசாரணையின் பெயர் ‘ப்ராஜெக்ட் இன் சார்ட்’ என்று வருமானவரித் துறையினர் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் வருமான வரி துறையினருக்கு வங்கிகள் கொடுக்கும் விவரங்கள் வைத்துதான் விசாரணை செய்து வந்தனர். ஆனால் தற்போது இன்றைய வாழ்க்கைக்கு தகுந்தார்போல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.

அது என்னவென்றால் நீங்கள் சமூக வலைதளங்களில் தாண்டி இணையத்தில் பதிவிடும் எதுவாக இருந்தாலும் அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறும். அதாவது வெளிநாடு சென்று சுற்றுலா சென்ற டிக்கெட் பதிவிட்டால் ,புதிய சொகுசு கார் வாங்குவது, விலை உயர்ந்த நகைகளை வாங்குவது போன்ற விவரங்கள் பதிவிட்டிருந்தார்.

அந்தத் தகவலின் அடிப்படையில் உங்களிடம் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கேட்டு நீங்கள் அனைவரும் இந்தியா தான் உலகில் முதலாக இந்த நடைமுறையைக் கொண்டு வந்ததாக நினைக்கலாம் ஆனால் அது உண்மை இல்லை.

இந்தியாவிற்கு முன்பு இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளும் ‘ப்ராஜெக்ட் இன் சார்ட்’ முறையில் மக்களின் பிக் டேட்டாகலை வைத்து அவரது வருமான வரி உடன் சோதனை செய்து ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இந்த புதிய திட்டத்தினால் நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் உலகின் பல பிரபலங்கள் பலரும் இனிமேல் கவனத்துடன் வரி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top