அசாம் மாநிலத்தில் தின்சுகியா எனும் பகுதியில் சோபாரன் என்பவர் அன்றாடம் காய்கறி விற்று வந்துள்ளார். ஒருநாள் காய்கறி விற்று வரும் நேரத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் பெண் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. குப்பைத் தொட்டியின் பக்கம் போய் பார்க்கும்போது அங்கு ஒரு பெண்குழந்தை இருந்துள்ளது.

அன்றாடம் கூலி வேலை செய்யும் அந்த வியாபாரி குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து அந்த குழந்தையை தன் குழந்தையை போல் வளர்த்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அக்குழந்தையை தன் குழந்தையை போல் வளர்த்து வந்துள்ளார்.

அக்குழந்தைக்கு ஜோதி என்னும் பெயர் உள்ளது. 25 வயதே ஆன அந்த பெண் பப்ளிக் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று லஞ்ச ஒழிப்பு துறையில் அசிஸ்டன்ட் கமிஷனராக பதவி வகித்து வகிக்கிறார். அவரின் தந்தைக்கு பெருமையும் சேர்த்துள்ளார்.