கேவலமாக, அநாகரிகமாக வீடியோக்கள் வெளியிடும் 6 யூடியூபர்கள்.. எல்லாம் புகழ், காசு போதை!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமக்கு வலைத்தளங்கள் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு லைக் மற்றும் வியுஸ்க்காக கேவலமாக அல்லது அநாகரிகமாக வீடியோக்கள் வெளியிடும் யூடியூபர்கள் பற்றி. பணத்திற்காகவும் TRP க்காகவும் தரம் தாழ்ந்து பேசும் சில சேனல்களை பற்றி நாம் இங்கு காணலாம்.

கோடாங்கி மிதுன் மாணிக்கம்: கோடாங்கி என்னும் பெயரில் சினிமா விமர்சன சேனல் நடத்தி வந்தவர் மிதுன் மாணிக்கம். இவர் பெரும்பாலும் சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களை ஆதிக்க மனப்பான்மையுடன் சொல்வதும், சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். எந்த தமிழ் படம் எங்கிருந்து சுட்டது என்று தனது சேனலில் அடிக்கடி பேசுபவர் ஹிந்தியிலிருந்து சுடப்பட்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பற்றி அறியாமல் அதில் நடித்தது அவருக்கே வெளிச்சம்.

ஃப்ரைடே ஃபபேக்ட்ஸ்: ஃப்ரைடே பாக்ஸ் எனப்படும் யூடியூப் சேனல் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் விமர்சனம், அதனுடைய சந்தை நிலவரம், கலெக்ஷன் போன்றவற்றை குறிப்பிடும் சேனல். இந்த சேனலில் அவ்வப்போது தொகுப்பாளர்கள் மாறினாலும் அதில் சொல்லப்படும் அதிகாரமிக்க கருத்துக்கள் மாறுவதில்லை. சில சமயம் மற்ற யூடியூப் சேனல்கள் உடன் மோதல் போக்கிலும் இவர்கள் ஈடுபடுவதுண்டு. தனிப்பட்ட முறையில் சில நடிகர்கள் மீது விமர்சனம் வைக்கவும் தவறுவதில்லை இந்த சேனலை நடத்துவோர்.

பயில்வான் ரங்கநாதன்: நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடத்திவரும் யூடியூப் சேனலில் அடிக்கடி பல சர்ச்சை கருத்துக்களை அவர் கூறுகிறார். பல நடிகர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார். குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி மட்டுமே அவர் அதிகம் யூடியூப் சேனலில் போஸ்ட் செய்து மிக குறுகிய காலத்தில் புகழ் பெற்றுவிட்டார். அடுத்து இவரது வீடியோ எப்போது வெளிவரும் அதன் மூலம் யாருடைய அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வரும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட சுசித்ரா உடன் அவருக்கு ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ சட்டை மாறன்: யூடியூப் சேனல் தொடர்ந்து ரசிப்பவர்கள் ப்ளூ சட்டை மாறன் மறக்க இயலாது. அந்த அளவுக்கு அவர் மிகப் பிரபலம். ஆரம்ப காலங்களில் தமிழ் தெய்வங்கள் வளர்ச்சிக்காகவே பல நல்ல விஷயங்களை தைரியமாக கருத்து சொன்னவர் போகப்போக தனிப்பட்ட முறையில் நடிகர்கள் மீது விமர்சனம் வைப்பதும் படத்தை மிக கேவலமாக கழுவி விடுவதும் போன்ற வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்தார். இன்றும் இவரது யூடியூப் சேனல் மூலமாக பட விமர்சனத்தை பார்த்துவிட்டு திரைப்படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை இருக்கத்தான் செய்கிறது. இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே ராஜன்: பழம்பெரும் தயாரிப்பாளர் ஆன கே ராஜன் அவர்கள் தனியாக தனக்கென்று எந்த ஒரு யூடியூப் செல்லும் வைத்திருக்க இல்லை. ஆனாலும் இவர் யூடியூப் சேனலில் மிகப் பிரபலம். நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து பொதுமேடையில் அதிகமாக பேசுவது இவரது வாடிக்கை. பல நேரங்களில் இவர் தனி நபர் தாக்குதல் தொடுப்பதும் சில உண்மைகளை அப்பட்டமாக கூறுவதாலும் இவரது வீடியோவை காண்பதற்கும் ரசிகர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

சவுக்கு சங்கர்: சவுக்கு சங்கர் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களை தாண்டி அரசியல் விமர்சனங்களுக்கும் சமுதாய விமர்சனங்களுக்கும் பெயர் போனவர். அவ்வபோது சில நடிகர்களைப் பற்றியும் சில திரைப் படங்களைப் பற்றியும் அவர் விமர்சனங்கள் செய்வதுண்டு. பெரும்பாலும் இவரது விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்கள் ஆகவே இருக்கும். மேலும் ஆளும் கட்சியான திமுக வுக்கு எதிராக வும் அதிமுகவுக்கு எதிராகவும் அவ்வப்போது பல கருத்துகளை தரவுகள் கூட இல்லாமல் பதிவு செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வார். தற்போதும் அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது.

Next Story

- Advertisement -