Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித் ஸ்ரீராம் குரலில் அருண் விஜய்யின் “தடம்” பட ‘இணையே’ பாடல் லிரிக் வீடியோ
Published on
‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் ரெடியாகியுள்ளது. இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய்.
இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் மதன் கருகிய வரிகளில் உருவான “இணையே” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. சித் ஸ்ரீராம் – பத்மலதா இப்பாடலை இணைந்து பாடியுள்ளார்கள்.
