அறிமுக நடிகர் ஆகாஷ், மிஷ்டி, ஜெயப்ரதா, நெப்போலியன் மற்றும் நாசர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் யாகம்.

இதன் மோஷன் பிக்சர் ரிலீஸ் விஜய் சேதுபதி மூலம் silaசில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது.

அதன்பின் தற்போது இதன் டீசர் வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது.

இதில் பங்கு கொண்டு பேசிய நெப்போலியன் அவர்கள் “மூன்று விசயங்களுக்காக இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

முக்கியமான முதல் காரணம் இந்த படத்தில் ஜெயப்ரதா நடிக்கிறார்கள் என்பதுதான். அவர் பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும்போது அடிக்கடி அவரை கண்கொட்டாமல் பார்ப்பேன், இந்த வயசிலும் இப்படி இருக்கிறாரே என்று. இவரும் ஜெயமாலினியும் பாராளுமன்றம் வரும்போது எல்லா எம்.பி.க்களும் வாயை பிளந்துகொண்டு இவர்கள் அழகை ரசித்துப் பாப்போம். எனக்கு ஜோடி அவர்தான் என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டேன்.

இப்போது இருக்கும் நடிகைகளை எனக்கு ஜோடியாக போட்டிருந்தால் கூட ஒத்திருக்க மாட்டேன், ஜெயப்ரதா ஜோடி என்ற ஒரே காரணத்தால்தான் ஒப்புக்கொண்டேன்.

இரண்டாவது ஷங்கர் படத்தில் நடிக்க எனக்கு மிகுந்த ஆசை, ஆனால் அது நிறைவேறவில்லை, தற்போது அவரது அசோசியேட் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூன்றாவது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாவதால் இருதரப்பு ரசிகர்களிடமும் என் நடிப்பு சென்று சேரும் என்று நினைத்தேன்.” இவ்வாறு கூறினார்.

பொதுவிடத்தில் ஜொல்லிய நெப்போலியனை பற்றிதான் இப்போது வலைதளங்களில் பேச்சு.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நமக்கு எப்படி நயந்தாராவோ, அப்படி அவரோடு இளவயசுல ஜெயப்ரதா இருந்திருப்பாங்க. இதப்போய் பெருசா பேசிட்டு. ஆயிரம் இருந்தாலும் ஜெயப்ரதா அழகோ அழகுதான்.