Connect with us
Cinemapettai

Cinemapettai

surya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் படத்தில் மல்லுவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டும் இணைந்தது…

சூர்யா படத்தில் பாலிவுட்டும் இணைந்தது

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் 37வது படத்தில் மல்லுவுட், டோலிவுட் பிரபலங்களை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரம் ஒருவரும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

surya

நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தாலும், சொல்லும்படியான வெற்றியை பெற்று தரவில்லை. அந்த வேளையில், பாலா இயக்கிய நந்தா படத்தின் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதுவரை சாக்லேட் பாயாக பார்த்த சூர்யாவை அதிரடியான ரவுடியாக பார்த்த போது ரசிகர்களே சற்று ஆடித்தான் போனார்கள். அப்படம் பெற்று தந்த வெற்றியால் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் வந்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மூலம் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தை இந்த வருட தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாக அமைய இருக்கிறது.

surya

surya

இப்படத்தில் சூர்யாவிற்கு ஒன்று இல்லை இரண்டு இல்லை நான்கு வித்தியாசமான கெட்டப்புகள் என்ற தகவல்கள் உலா வருகிறது. சயிஷா சைகல் இப்படத்தின் நாயகியாகி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் நடிக்க இருக்கிறார். இதெல்லாம் தெரிஞ்ச தகவல். அதானே! தற்போது, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலக ஸ்டார்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டின் பிரபல நடிகர் பொம்மன் இரானியும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷூட்டிங்கை லண்டனில் வருகிற ஜூன் 25-ஆம் தேதி முதல் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top