புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சந்தியா ராகம் சீரியலில் புத்தி கெட்டுப் போய் திரியும் சீனு.. கதிரை அடித்து மாயவை திட்டும் பத்மாவின் மகன்

Sandhiyaragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கதிர் தாலி கட்டினது தனத்திற்கு பிடிக்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயற்சி எடுத்தார். அதை குடும்பத்தில் இருப்பவர்கள் பார்த்து தடுத்து நிப்பாட்டி விட்டார்கள். அடுத்து சீனுவின் அப்பாவுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பிழைத்துக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் தனம் யாரிடமும் சொல்லாமல் புவனேஸ்வரி வீட்டுக்கு போய்விட்டார். புவனேஸ்வரி இதுதான் சான்ஸ் என்று தனத்தின் மனசை மாற்றி கார்த்திக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். ஆனால் இது எதுவும் தெரியாத ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்கள் தனத்தை தேடி நாளா பக்கமும் அலைகிறார்கள்.

பிறகு சீனு இதற்கெல்லாம் காரணம் கதிர் தான் என்று சொல்லி மாமாவை கூட்டிட்டு பாட்டி வீட்டுக்கு போகிறார். அங்கே போனதும் கதிரை பார்த்து அடித்து மாயாவை திட்டும் அளவிற்கு புத்தி கெட்டுப் போய் சீனு கொஞ்சம் கொடூரமாக நடந்து கொள்கிறார். இதுதான் மாயவை உண்மையாக நேசித்ததற்கு அர்த்தமா என்பதற்கு ஏற்ப சீனு எதைப் பற்றியும் யோசிக்காமல் மாயாவை அவமானப்படுத்தி பேசுகிறார்.

இதயெல்லாம் தொடர்ந்து எப்படியாவது தனத்தை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கதிர் மற்றும் மாயா இருவரும் சேர்ந்து புவனேஸ்வரி வீட்டுக்கு போகிறார்கள். ஆனால் புவனேஸ்வரி தனத்தை மறைத்து வைத்து இங்கே வரவில்லை என்று நாடகமாடி விடுகிறார். ஆனாலும் மாயாவிற்கு இங்குதான் தனம் இருப்பார் என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது.

அந்த வகையில் ஜானகிடம் சொல்லி ஜானகியை புவனேஸ்வரி வீட்டுக்கு மாயா கூட்டிட்டு போகிறார். ஆனால் அதற்குள் புவனேஸ்வரி ரெஜிஸ்டர் ஆபிஸரை வரவைத்து திருமணம் பண்ணுவதற்கு எல்லாம் தயாராகி விட்டார். ஆனால் அந்த நேரத்தில் வந்து ஜானகி தனத்தை காப்பாற்றி புவனேஸ்வரிக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து மாயா மீது எந்த தவறும் இல்லை என்று ஜானகி புரிந்து கொண்ட மாதிரி ரகுராமும் மாயா மற்றும் கதிரை பற்றி சீக்கிரம் புரிந்து கொண்டால் புவனேஸ்வரி ஆட்டம் அடங்கிவிடும்.

- Advertisement -

Trending News