Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!. குந்தவையை விட கம்மியா இருக்குதே
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்தினம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குந்தவை திரிஷாவை விட கம்மியாக இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட டாப் நடிகர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வரை வசூலை வாரி குவித்தது. அதன் பிறகு அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு படு ஜோராக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பார். வந்தியத்தேவனை கார்த்தி தனது நடிப்பின் மூலம் திரையில் கொண்டு வந்து ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளார்.
இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு 5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read: பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?
இவ்வாறு படம் முழுக்க பயணித்த வந்தியத்தேவன் கார்த்திக்கு திரிஷாவை விட கம்மியாக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரண்மனையில் அலுகாமல் குலுங்காமல் நடித்த திரிஷாவை விட போர்க்களத்தில் படாத பாடுப்பட்ட கார்த்திக்கு கம்மியாக சம்பளம் கொடுத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல ரொமான்டிக் ஹீரோவாக படத்தில் இருக்கும் பெண்களை எல்லாம் டாவடித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவனுக்கு இவ்வளவுதான் சம்பளமா என்று இந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.
Also Read: வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான யாத்திசை.. முதல் நாள்மொத்த வசூல் ரிப்போர்ட்
