fbpx
Connect with us

Cinemapettai

இனிமேல் ஒரு படம் வெளியான பிறகுதான் நடிகர்களுக்கு சம்பளம்.. நடிகர்களின் கொட்டம் அடங்குமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனிமேல் ஒரு படம் வெளியான பிறகுதான் நடிகர்களுக்கு சம்பளம்.. நடிகர்களின் கொட்டம் அடங்குமா?

திரையுலகைப் பொறுத்தவரை சமீப காலமாக இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் பெரிய ஹீரோக்கள் பெரிய அளவில் சம்பளம் வாங்குவதால் பல தயாரிப்பாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர் என்பதுதான்.

அதற்கு கொரானா பாதிப்பால் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மாத காலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அசோசியேஷன் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி இருவரும் இணைந்து 2 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோவாக சத்யராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தின் 2 கோடி பட்ஜெட்டை 200 பங்குகளாக பிரித்து விற்பனை செய்ய இருக்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள். படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே அவரவரின் மார்க்கெட்டுக்கு தகுந்தபடி சம்பளம் கொடுக்கப்படும் என்ற முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஹீரோக்களின் நிலைமைதான் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு ஆப்பு வைக்க வேண்டும் என திட்டம் தீட்டி இந்த வேலையில் இறங்கியது போல் தெரிகிறது. இனியாவது பந்தா பண்ணும் நடிகர்களின் கொட்டம் அடங்குமா?

Continue Reading
To Top