பிரபல கன்னட நடிகை ரம்யா அரசியலில் நுழைந்து பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார். கடந்த ஆண்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரம்யா, தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.

ரம்யாவின் இந்த கருத்து தேசத்துக்கு விரோதமானது என்று வக்கில் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரம்யா தேசத்துக்கு துரோகமான கருத்துக்களை கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவர் மீது தேசதுரோக வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் ரம்யா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும், தனுஷ் யாருடைய மகன் என்ற வழக்கில் தனுஷ்க்கு ஆதரவாக கதிரேஷன் தம்பதி தொடர்ந்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தனுஷ், ரம்யா இருவரும் பொல்லாதவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள். இவர்கள் இருவரும் இரு வேறு வழக்குகளில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.