செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சூர்யாவுக்காக விட்டுக்கொடுத்தாரா? கார்த்திக்கு தன்னுடைய கேரியரில் ஏற்பட்ட கரும்புள்ளி

சூர்யா நடிப்பல், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. சூர்யாவுடன் இணைந்து நட்டி, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பூஜை போடப்பட்ட நாள் முதல் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியிடும் போதும், இப்படம் ரிலீஸாகும் வரையில் இதன் எதிர்பார்ப்பு குறையவில்லை.

நாளை மறுநாள் நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் 38 மொழிகளில், 11,500 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா கூறிய நிலையில், இப்படம் கதை, திரைக்கதை அமைப்பை தாண்டி, இப்படம் எத்தனை கோடி வசூலிக்கும் என்பதை பார்க்கவும் சிலர் தயாராக உள்ளனர்.

கங்குவா படத்தின் ரிலீசை ஒட்டி தற்போது புரமோசன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகி தமிழில் 5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பல புதிய விசயங்கள், வியப்பூட்டும் வி.எஃப்.எக்ஸ், ஆக்சன் காட்சிகள், கிராப்கிக்ஸ் காட்சிகள் இருப்பதாக படக்குழு தெரிவித்தனர்.

புகைப்பிடிக்கும் காட்சியில் கார்த்தி?

மேலும், இப்படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இதுபற்றி சூர்யா, சிவா இருவரும் சூசகமாக தெரிவித்தனர். இந்த நிலையில் கங்குவா பட ரிலீஸ் டிரெயிலரின் கார்த்தி இருக்கும் காட்சிகள் இடம்பெற்றதாக கூறிவருகின்றனர்.

இதில், கார்த்தி சினிமாவில் அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் இருந்து கடைசியாக வெளியான மெய்யழகன் படம் வரை 17 வருட சினிமா வாழ்வில் இதுவரை இல்லாத வகையில் முதன் முதலாக புகைப் பிடிப்பதுபோல் நடித்திருக்கிறார். எனவே அண்ணன் சூர்யாவுக்காக தன் இமேஜை பற்றிக் கவலைப்படாமல் கொள்கையை தளர்த்திவிட்டு, கார்த்தி விட்டுக் கொடுத்தார என கேள்வி எழுந்துள்ளது.

இதெல்லாம் தப்பு பாஸ், சமூக ஆர்வலர்கள் கேள்வி

இது சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தவறான வழிகாட்டுதலாக அமையும், இது தப்பு பாஸ் என சமூக ஆர்வலர்கள் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, படத்தின் கேரக்டரின் தேவை கருதி கார்த்தி புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே சூர்யா 2 கெட்டப்களில் நடித்திருக்கும் நிலையில், கார்த்தி கேமியோவாக வருவதால் மேலும் படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News