வைகைப்புயல் வடிவேலு

சில பல மாதங்களாகவே தவறான விஷயங்களுக்காகவே இவரின் பெயர் கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.

vadivelu

இம்சை அரசன் 23-ம் புலிகேசி

வடிவேலுவின் சினிமா வாழ்க்கை புரட்டி போட்ட படம். காமெடியனாக மட்டும் இருந்தவரை ஹீரோவாக மாற்றிய படம். இயக்குனர் ஷங்கர் தயாரித்த படம். அவரின் சீடர் சிம்புதேவன் இயக்கிய படம். 2001 இல் வெளியான இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார் வடிவேலு. வசனங்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு கூடுதல் பிளஸ்

இம்சை அரசன் 24-ம் புலிகேசி

24am pulikesi – Team

இயக்குநர் ஷங்கரே பார்ட் 2-வை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ உடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்க முன்வந்தார். சிம்புதேவன் இயக்குனர். வடிவேலு அவர்களுக்கு மூன்று வேடங்கள். இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக பார்வதி ஓமனக்குட்டன். ஜிப்ரான் இசை. ஆர்.சரவணன் ஒளிப்பதிவு.

vadivelu pulikesi 24

படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பல கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்பட்டது. படத்தின் ஸ்க்ரிப்டில் வடிவேலு தலையீடு செய்து சில காட்சிகளை மாற்ற சொல்லியிருக்கிறார். மேலும், படப்பிடிப்பின் போது “இந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை. வேறு ஸ்டைலில் வையுங்கள் ” என்றும் வடிவேலு கூறியிருக்கிறார். பின், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதால் படப்பிடிப்பில் கலந்து கொள்வதை வடிவேலு தவிர்த்துள்ளார். படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரண்மனை செட்டும் போடப்பட்டும், ஷூட்டிங் நடக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கம்

24 pulikesi

இந்நிலையில் கடுப்பான ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்தார். அதனை விசாரித்த சங்க உறுப்பினர்களை சுமூகமாக இந்த பிரச்னையை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வடிவேலுவிடம் ஒன்று அட்வான்ஸ் ரூ.1 ½ கோடி மற்றும் செட் போட்டதற்கான செலவு, வீணாக விரயமான பணத்திற்கான வட்டி என மொத்தமாக ரூ.8 ¾ கோடி செட்டில் செய்யுங்கள், அல்லது படத்தினை ஸ்கிரிப்ட் படி நடித்து கொடுங்கள் என வடிவேலுவிடம் தயாரிப்பளார் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடிவேலு அவர்கள் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்று செய்தார்கள் வெளியாகியுள்ளது. எனினும் மீண்டும் ஒப்பந்தம் கை எழுத்து ஆனாலே படம் தொடங்குவது உறுதியாகும் .