ஒருவழியாக டேக் ஆஃப் ஆகவிருக்கிறது இம்சை அரசன் பார்ட் 2. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.

மெகா ஹிட் படமாக அமைந்த அந்த படத்தின் வெற்றியை அதற்கு பின்னர், தயாரிப்பாளர் ஷங்கர், இயக்குனர் சிம்புதேவன், ஹீரோ வடிவேலு யாருமே வேறெந்த படத்திலும் பார்க்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது. வடிவேலு சம்பளம் காரணமாக இழுத்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதாம். ஒரே ஒரு சின்ன மாற்றம் தயாரிப்பாளர் மட்டும் ஷங்கர் இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆடி மாதத்தில் அறிவிப்பு வெளியிடவேண்டாமே என்று செண்டிமெண்டாக ஆவணி மாதத்துக்காக்க் காத்திருக்கிறார்கள்.