லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 38 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தானில் வாய்ப்பு குறையவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்றார். அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா குடிபெயர்ந்தார். அதன் பின் இவர் தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்.

தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதே வேகத்தில் மைதானத்தை சுத்தி உவர் ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு.

Imran Tahir

ஐபில்

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இம்முறை இவரும் ஹர்பஜனும் தங்கள் பந்துவீச்சில் சென்னை ரசிகர்களை கவர்ந்ததை விட தங்களின் டீவீட்டுகளால் தான் அசத்தினார். அதிலும் தாஹிர் “எடுடா வண்டிய” , “போடுடா விசில்” மற்றும் ரஜினியின் பன்ச் வாசகங்களை போட்டு ஒரு கலக்கு கலக்கினார்.

Kaala

இவர் ரஜினியின் காலா படம் பார்த்துவிட்டு போட்ட ட்வீட் 8500 லைக் , 1700 ரி ட்வீட் தாண்டி வைரல் ஆகியுள்ளது.