Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

தாஹிர் விக்கெட் எடுத்து விட்டு ஓடும் பொழுது நானும் வாட்சனும் இது தான் பண்ணுவோம் – தல தோனி பகிர்ந்த தகவல்.

மனிதர் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஆடுவதால்,  விக்கெட் எடுத்த பின் ஓடுவதால் இவருக்கு  பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் வந்து விட்டது .

40 வயதை கடந்தாலும், ஐபில் இல்  இன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் வாங்க சரிக்கு சமமாக போட்டி போடுபவர் இம்ரான் தாஹிர். மனிதர் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஆடுவதால்,  விக்கெட் எடுத்த பின் ஓடுவதால் இவருக்கு  பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் வந்து விட்டது.

இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் கை கொடுக்கிறார் தோனிக்கு. பல சமயம் இவர் விக்கெட் எடுத்துவிட்டு கொண்டாடும் விதமாக ஓடும் பொழுது மனிதர் மெரினா  வரை போய் விடுவாரோ என்றே நம்மக்கு குழப்பம் வந்துவிடும்.  இந்நிலையில் நேற்று முன் தினம்  போட்டி முடிந்த பின்னர், இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி  தோனியிடம்  எழுப்பப்பட்டது.

அதற்கு,‘ அவர் கொண்டாடுவதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். நானும் வாட்சனும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம், வாழ்த்து சொல்ல அவரிடம் போக மாட்டோம் , ஏன்னென்றால் பல சமயங்களில்  மைதானத்தின் மறுபக்கம் சென்று விடுவார். நானும் வாட்சனும் 100 சதவிகிதம் பிட் கிடையாது, எனவே எதற்காக அவ்வளவு தூரம் போக வேண்டும் என வெயிட் பண்ணுவோம், அவர் மீண்டும் இடத்திற்கு வரும் வரை. அதன் பின் நன்றாக வீசினாய் என கூறிவிட்டு, எங்களின் இடத்துக்கு செல்வோம்’ என தோனி கூறியுள்ளார்.

நகைச்சுவையை கலந்து யதார்த்தை சொல்வதில் தல தோனி போல் வருமா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top