லைக்ஸ் குவிக்குது ஐபில் முடிந்த பின் அன்பு சகோதரன் இம்ரான் தாஹிர் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

இம்ரான் தாஹிர் இன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் தட்டி சென்றவர் . 40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது. இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் தோனிக்கு கை கொடுத்தார். எனினும் ஒரு ரன் வித்தியாசத்தில் நேற்று போட்டியை தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். வழக்கம் போல ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் தாஹிர்.

நாங்கள் நன்றாக முயற்சி செய்தோம். எனினும் முடிவு எதிர்பாராத விதமாகிவிட்டது. ரசிகர்களுக்கு நன்றி . அடுத்தமுறை இன்னும் சிறப்பாக வருவோம்.

பரப்பில் கேப்பை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கேப் ஜெயித்தது நான் அல்ல ரசிகர்களான நீங்கள் தான். என் நன்றியை சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை.

இங்கிருந்து விடை பெறுகிறேன், ஆனால் உங்களின் உள்ளத்தில் இருந்து இல்லை. மீண்டும் அடுத்த வருடம் சூறாவளியாக வருவோம். என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில்.

 

Leave a Comment