“செய்யுறதும் தெரியாது, சொல்லுறதும் .. “- லைக்ஸ் குவிக்குது வெற்றிக்கு பின் இம்ரான் தாஹிர் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

இன்றைய இளசுகளிடம் இருந்து பர்பில் கேப் வாங்க சரிக்கு சமமாக போட்டி போடுகிறார் இம்ரான் தாஹிர். 40 வயதை கடந்தாலும், இவர் பந்து வீச்சின் வீரியம் குறையவில்லை, நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே தான் செல்கிறது. மனிதர் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஆடுவதால், மண்ணின் மைந்தன் ஆகிவிட்டார். மேலும் பராசத்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல அடைமொழியும் பெற்று விட்டார். இந்த சீசன் பல இக்கட்டான சூழலில் இவர் தான் கை கொடுக்கிறார் தோனிக்கு.

நேற்று நடந்த போட்டியில், தோனி 44 நாட் அவுட் (22) மற்றும் ஜடேஜா 25 (10) அதிரடியால் டீம்  179  குவித்தது. டெல்லி டீம் 99 ரன் ஆல் அவுட் ஆனது. தாஹிர் (3.2 -0 -12 -4) , ஜடேஜா (3 -0 -9- 3 ) . ஹர்பஜன், சாஹர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

குறிப்பாக பண்ட் விக்கெட்டை முதலில் வீழ்த்தினார் தாஹிர். இது திருப்புமுனையாக மாறியது. பின்னர் ருத்தேர்போர்ட மற்றும் அக்சர் படேல் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

வெற்றிக்கு பின் வழக்கம் போல  ஸ்டேட்டஸ் தட்டி அசத்தினார்.

Leave a Comment