Sports | விளையாட்டு
பேட்ட பன்ச் வசனத்துடன் மரண மாஸ் காளியாக சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு மீண்டும் ஆட வந்துவிட்டான் இம்ரான் தாஹிர். ஐபில் 2019 .
ஐபில் 2019 இம்ரான் தாஹிர் மீண்டும் ரஜினி பட பன்ச் வசனத்தை ஸ்டேட்டஸ் ஆக தட்ட ஆரம்பித்துவிட்டார்.

இம்ரான் தாஹிர்
லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 38 வயது ஆகிறது. டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதே வேகத்தில் மைதானத்தை சுத்தி ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு.
ஐபில் 2019
சென்ற ஆண்டு தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவரும் ஹர்பஜனும் தங்கள் பந்துவீச்சில் சென்னை ரசிகர்களை கவர்ந்ததை விட தங்களின் டீவீட்டுகளால் தான் அசத்தினார். அதிலும் தாஹிர் “எடுடா வண்டிய” , “போடுடா விசில்” மற்றும் ரஜினியின் பன்ச் வாசகங்களை போட்டு ஒரு கலக்கு கலக்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்நிலையில் புதிய சீசன் அட்டவணை வெளியானதும் மனிதர் ட்வீட் ஒன்றை தட்டியுளார்.

ipl
“தமிழ் மக்களே நலமா ? மார்ச் 23 நம் கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம் வருவோம் வெல்வோம் செல்வோம் இந்த வருஷம் காளியோட ஆட்டத்தை பார்ப்பீங்க. கொலை காண்டுல வரோம். செண்டிமெண்ட் இருக்கிறவன் குறுக்க வராத. எடுடா வண்டிய , போடுடா விசில” என்பதே அது.
இதற்கு நம் சி எஸ் கே அட்மின் பதிலும் தட்டியுளார். “நலம். நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது ? தெற்கு ஆப்பிரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் உள்ள அனைவரையும் கேட்டதாக சொல்லுங்கள். தம்பி நிகிடி நலமா ? வரும் பொழுது மறவாமல் சீமை ரொட்டியும், மிட்டாயும் வாங்கி வரவும் எண்கள் பராசத்தி எக்ஸ்பிரஸ் அவர்கள். மீண்டும் யெல்லோ ராஜ்யம் தான் .”
ஆக மொத்தத்தில் ட்விட்டரில் ஐபில் கொண்டாடட்டம் ஆரமபம் ஆகி விட்டது.
