fbpx
Connect with us

நீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019

Sports | விளையாட்டு

நீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019

இம்ரான் தாஹிர்

லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார். தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதி வேகத்தில் மைதானத்தை சுத்தி ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Imran Tahir

சென்ற சீசன் சி எஸ் கே அணி இவரை தேர்வு செய்தது. இவரும் ஹர்பஜனும் தங்கள் பந்துவீச்சில் சென்னை ரசிகர்களை கவர்ந்ததை விட தங்களின் தமிழ் டீவீட்டுகளால் தான் அசத்தினார். அதிலும் தாஹிர் “எடுடா வண்டிய” , “போடுடா விசில்” மற்றும் ரஜினியின் பன்ச் வாசகங்களை போட்டு ஒரு கலக்கு கலக்கினார். “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்ற பட்டப்பெயரும் இவருக்கு வந்து சேர்ந்தது.

இந்நிலையில் புதிய சீசன் துவங்குவதை பற்றி ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். “என் இனிய தமிழ் மக்களே, நலம்; நலம் அறிய ஆவல். நமது சிங்கார சென்னையில் ஐபில் போட்டிகள் துவங்கும் நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆட்டைக்கு ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி. எடுடா வண்டியை, போடுடா விசில” என்பதே அது.

இந்த டீவீட்டுக்கு சி எஸ் கே சார்பில் லியோ என்பவர் பதில் தந்தார். “நானும் பராசக்தி எஸ்பிரஸுக்காக நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன்” என்பது அது.

10000 லைக்குகளை பெற்றது இந்த ட்வீட். உடன் சென்னை ரசிகர்களும் இம்ரானுக்கு பதில் தந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top