Connect with us

Cinemapettai

காஷ்மீர் பிரச்சனையை இதுதான் முடிவு செய்யும்.! இம்ரான் கான் பகிரங்கமாக சவால்

imran-khan-modi

India | இந்தியா

காஷ்மீர் பிரச்சனையை இதுதான் முடிவு செய்யும்.! இம்ரான் கான் பகிரங்கமாக சவால்

இந்தியாவில் புல்வாமா தாக்குதல் போல் இன்னுமொரு தாக்குதல் நடைபெறும் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை நீக்கிய இந்தியா தற்போது பல பிரச்சினைகளை சந்திக்க உள்ளதாம். இது இம்ரான் கான் இந்தியாவை மிரட்டுவது போன்று உள்ளது.

ஏனென்றால் இரு நாட்டுக்க்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கு இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை நாங்களும் அதை நிறுத்திக் கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடந்தால் இந்தியா மீண்டும் பாகிஸ்தான்தான் அதற்கு காரணம் என்று சொல்லுவார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தாலும் யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாமல் போய்விடும். காஷ்மீர் பிரச்சனையை போர்தான் முடிவு செய்யும்.

ஆகையால் உலக நாடுகள் இதில் தலையிட்டு உடனடியாக பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  இம்ரான் கான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதைப்பற்றி கொண்டு செல்வோம், உலகின் ஒவ்வொரு அமைப்பிலும் நாம் இதைப்பற்றி வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச கோர்ட்டுக்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லும் திட்டமும் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் இந்தக் கொள்கைதான் மகாத்மா காந்தியைக் கொன்றது என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் இயக்கியிருக்கும் இந்த சட்டம் ஒழுங்கு மக்களுக்கானது அல்ல என்றும் ஒரு அராஜகமான அரசியலை கையாண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற பிரச்சினைகளை இந்தியா எப்படி கையாளப் போவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top