Jayam Ravi : ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை நாளுக்கு நாள் பூதாகரமாகி சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி மீது புகார் கொடுத்திருந்தார். மேலும் ஆர்த்தி இந்த விவாகரத்து குறித்து தனக்கு முன்பு எதுவும் தெரியாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில் தன்னுடைய விவாகரத்திற்கான காரணம் என்னவென்று ஜெயம் ரவி கூறியுள்ளார். ஜெயம் ரவி ஷாவிடம் இந்த விஷயத்தை கூறிய நிலையில் அவர் யூடியூபில் இதை பகிர்ந்து இருக்கிறார். அதாவது விவாகரத்து செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னால் குழந்தைகள் ஜெயம் ரவியுடன் தான் இருந்தனராம்.
அவரின் சின்ன பையன் இடம் இது குறித்து பேச முடியாத நிலையில், மூத்த மகனிடம் தன்னுடைய விவாகரத்து பற்றி கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் சேர்ந்து இருந்தால் தான் தனக்கு சந்தோஷம் என்று மூத்த மகன் கூறியதாகவும், அதன் பிறகு விரிவாக எல்லாவற்றையும் ஜெயம் ரவி எடுத்து சொல்லி உள்ளார்.
ஜெயம் ரவி விவாகரத்து கேட்க முக்கியமான காரணங்கள்
மேலும் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்காக ஐடிசி ஹோட்டலில் காத்திருந்தபோது, வேண்டுமென்றே ஆர்த்தி குழந்தைகளை அழைத்துக் கொண்டு இலங்கை சென்றுவிட்டாராம். திருமணம் ஆன கடந்த 13 ஆண்டுகளாக ஆர்த்தி உடன் தான் ஜெயம் ரவியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஆர்த்தி தனியாக இரண்டு, மூன்று அக்கவுண்ட் வைத்துள்ளாராம். வெளிநாடுகள் செல்லும் போது ஏதாவது ஷாப்பிங் செய்தால் உடனடியாகவே போன் செய்து என்ன வாங்கினீங்க என்று ஆர்த்தி கேட்பாராம். மேலும் அவரது அம்மா தயாரிப்பில் ஜெயம் ரவி சில படங்களில் நடித்துள்ளார்.
முதல் படம் நடித்த போது நஷ்டம் என்று சொன்னதால் இனி அவரது தயாரிப்பில் நடிக்க வேண்டாம் என்று ஜெயம் ரவி முடிவெடுத்துள்ளார். ஆனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க விடாமல் செய்து மீண்டும் அவரது படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அடுத்து நடித்த இரண்டு படங்களும் நஷ்டம் என்று கூறினார்கள்.
படத்தை பிரமோஷன் செய்யக்கூட காசு இல்லை என்று கூறினார்களாம். ஆனால் வேறு ஒருவரை வைத்து கணக்கு பார்க்கும் போதும் மூன்று படங்களுமே லாபத்தை தான் கொடுத்துள்ளது. ஜெயம் ரவியின் வீட்டில் மொத்தம் ஆறு கார்கள் உள்ள நிலையில் நான்கு கார்கள் ஆர்த்தியின் பெயரில் தான் இருக்கிறதாம்.
மேலும் ஆர்த்தி குடும்பம் வீட்டின் வேலைக்காரர்கள் முன் தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆர்த்தியின் சந்தேகம் தனக்கு மெண்டல் டார்ச்சர் ஆக இருந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். ஊட்டிக்கு படப்பிடிப்பு சென்ற போது வீடியோ கால் செய்து யாருடன் இருக்கிறேன் என்ற சந்தேகப்பட்டு காட்ட சொன்னார்.
இதனால் ஷூட்டிங்கை பாதியிலேயே விட்டுவிட்டு ஊட்டியில் இருந்து கிளம்பி விட்டேன் என்றும் ஜெயம் ரவி கூறினார். ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நிலையில் இதிலிருந்து வெளியே வர ஜெயம் ரவி முடிவெடுத்து தான் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகி உள்ளார்.
ஜெயம் ரவியின் குற்றச்சாட்டு
- ஜெயம் ரவியை தொடர்ந்து விவாகரத்து பெரும் பிரபல நடிகை
- ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார
- ஆர்த்தி இடமிருந்து இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்ட ஜெயம் ரவி