தனுஷ் ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளானவர். இதை தொடர்ந்து அத்தனை விமர்சனங்களையும் உடைத்துவிட்டு இன்று இந்திய அளவில் முன்னணி நடிகராகிவிட்டார்.

ஆனால், தனுஷ் ஆடுகளம் படத்திற்கு பிறகே மிகவும் தடுமாறினார், எந்த படமும் ஹிட் இல்லை, தனுஷ் கதை முடிந்தது என்ற ரேஞ்சில் பேசினார்கள்.இந்நிலையில் தன் திறமையை மட்டும் நம்பி ஒளிப்பதிவாளர் வேல்ராஜுடன் தனுஷ் கைக்கோர்த்த படம் தான் வேலையில்லா பட்டதாரி.

அதிகம் படித்தவை:  கவர்ச்சி உடையால் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை?

பெரிய பட்ஜெட் ஏதும் இல்லை, பெரிய லொக்கெஷன் ஏதும் இல்லை, பிரமாண்ட செட் ஏதும் இல்லை ஆனால், வசூல் ரூ 50 கோடியை தாண்டியது.இன்றைய இன்ஜினியரிங் மாணவர்களின் இன்பம், துன்பம் என அனைத்தையும் ஸ்கீரினில் தனுஷ் அப்படியே காட்ட, படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் 2.O ரிலீஸ்?

இந்த படம் வெளிவந்து இன்றுடன் இரண்டு  வருடம் ஆகின்றது, இதை ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.