Connect with us
boomerang-movie

இஞ்சி மகத்துவம் தெரியுமா? தெரிஞ்சுக்கங்க! நோய்க்கு டாட்டா..!

ginger

இஞ்சி மகத்துவம் தெரியுமா? தெரிஞ்சுக்கங்க! நோய்க்கு டாட்டா..!

சின்னச்சின்ன விஷயங்கள நாம பின்பற்றுவதில் சோம்பேறித்தனம் காட்டுவோம். அதுவே நமக்கு நீண்ட நெடிய நோய்களை உண்டாக்கி நிரந்தமா நடமாட முடியாம செஞ்சிடும்.

அதுக்கு பதிலா சின்னச்சின்ன விஷயங்களை பின்பற்றினா நமக்கு காலம் முழுவதும் நோய் அண்டாமல் பார்த்துக்கலாம்.
அந்த வகையில் இந்த இஞ்சி இருக்கு பாருங்க.. அதுக்கு நிகர் அதுவே தான். ஆமாங்க..இஞ்சி ஆன்டி ஆக்சிடெண்டா செயல்பட்டு நம்ம ஆயுசயே கூட்டுது.

பசி இல்லாமை, அஜீரணம், வயிறு மந்தம் போன்றவைகளுக்கு இஞ்சி சூப்பர் மருந்து. இஞ்சி காய்ஞ்சா சுக்கு. ரெண்டு பேருமே அண்ணன் தம்பி தான். ஆனா சுக்கு பயன்பாடு வேற மாதிரி. அதை அப்புறம் பார்க்கலாம்.

இப்ப இஞ்சி. இஞ்சி சித்த மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்த மருந்துகளில் பெரும்பாலும் இஞ்சி பயன்படுத்த படுதுன்னா அதன் முக்கியத்துவம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.
இஞ்சி கொஞ்சம் சூடான பொருள் என்றாலும் கபம்,வாதம் போன்ற நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளது.

ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்,குடலில் உள்ள கிருமிகளை கொல்லும்,கல்லீரலை சுத்தப்படுத்தும்,மலச்சிக்கல் வராமல் தடுக்கும், வயிற்று வலி ஏற்பட்டால் இஞ்சி சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் வயிற்று வலி தீரும்.

பசி எடுக்கலையா? கொத்தமல்லி தழையுடன் இஞ்சி சேர்த்து துவையலாக சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டை வலிக்கும் நல்ல மருந்தாகும். சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம் அதிகமாகி தலைசுற்றுவது குணமாகும்.

இஞ்சியை அளவோடுதான் சாப்பிட வேண்டும். தினமும் 5மி.கி அளவுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் ஊறிய இஞ்சி ஒரு துண்டு தினமும் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் அஜீரண கோளாறுகள் வராது.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்று நோய்கள் தீரும். இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறுகள் வராது. இஞ்சி மற்றும் புதினாவுடன் துவையல் செய்து சாப்பிட அஜீரணம்,பித்தம்,வாய் துர்நாற்றம் போன்றவை தீர்வதுடன் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

இந்த தொல்லைகள் எல்லாம் தீர்ந்தாலே நமக்கு வாழ்க்கையில் பாதி நோய்கள் தீர்ந்த மாதிரி தான். அதனால இஞ்சியை தினமும் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடுங்க. ஓகேவா?

நீங்க பாட்டுக்கு ஆர்வகோளாறுல எக்கச்சக்கமா சாப்பிட்டுட்டு பின்னாடி என்னை இஞ்சி தின்ன கொரங்கேன்னு திட்ட கூடாது. சொல்லீட்டேன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top