Tamil Cinema News | சினிமா செய்திகள்
இமான் வலைவீசி தேடும் பாடகர்கள்.. அண்ணாத்தைக்கு சூப்பர் பிளானா?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இமான் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு புதியவரை பாட வைப்பதற்காக இரண்டு பாடகர்களை தேட தொடங்கி உள்ளார். அவர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் மக்களே.
இமான் இசையமைத்த படங்களான கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்கள் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. இந்த படங்களின் இசை செம்ம . சூப்பராக இருந்தது.
இமான் தற்போது இசையமைத்து வரும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினி நடிக்கும் இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இமான் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அண்மையில் பெயின்டர் ஒருவர் எஸ்.பி.பி போல பாடிய வீடியோ ஆன்லைனில் ட்ரென்ட் ஆனது. அதே போல கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவர் விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னை காணாத பாடலை அப்படியே பாடினார்.

imman
இருவரின் போட்டோவையும் பதிவிட்டு, இந்த பாடும் திறமைகளை கண்டறிய உதவுங்கள் நண்பர்களே’ என தெரிவித்துள்ளார். இமான் இசையமைத்த கண்ணான கண்ணே பாடலை பாடி வைரல் ஆன கண்பார்வையற்ற திருமூர்த்தி என்பவரை தனது சீறு படத்தில் பாட வைத்தார் இமான்.
அதே போல இவர்களையும் கண்டறிந்து பாட வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் இமான் இருக்கிறார். அது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடலாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
