Internet Movie Data Base எனப்படும் இந்த IMDB இணையதளம் திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவற்றை பற்றிய செய்திகளை வெளியிடும் உலகின் முக்கியமான தளங்களில் ஒன்று.

இந்த தளம் சமீபத்தில் இந்தியாவின் டாப் சினிமா ஸ்டார்ஸ் பட்டியலை வெளியிட்டது. அதில் நமக்கு தெரிந்த நடிகர்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் வாங்க பார்க்கலாம்.

அனுஷ்கா:

anushka

எட்டாவது இடத்தில் தலைவி அனுஷ்கா உள்ளார். பாகுபலி முதல் மற்றும் இரண்டாவது படத்தில் தேவசேனாவாக நடிப்பில் நம் அனைவர் மனதையும் கவர்ந்ததால் இந்த இடம் இவருக்கு சொந்தமானது.

அனுஷ்கா ஷர்மா:

virat anushka

ஏழாம் இடத்தில் அனுஷ்கா ஷர்மா. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கரம் பிடித்த அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து பல ஹிந்தி ஹிட் படங்களை கொடுத்ததாலும் விளம்பர உலகிலும் கோடி கட்டிப்பறப்பதாலும் ஏழாம் இடத்தை தட்டிச்சென்றுள்ளார்.

பிரபாஸ்:

prabhas

ஆறாம் இடத்தில் நம்ம பாகுபலி பிரபாஸ். ஒரே படத்தில் உலக லெவல் புகழ் பெற்றவர். இரண்டு பாகங்களிலும் தனது உடலை வருத்தி படத்திற்காக இவர் செய்த அர்பணிப்பே இவருக்கு ஆறாம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது.

இர்பான் கான்:

actor

ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கும் நடிகர் இர்பான் கான். விளம்பரங்கள், பாலிவுட் படங்கள், ஹாலிவுட் படங்கள் என்று பம்பரமாய் சுற்றி உழைப்பவர் இர்பான் கான். இவரது அடுத்தடுத்த வெற்றியே இவருக்கு இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை கொடுத்துள்ளது.

தமன்னா:

thamanna

ஒரே ஒரு படம் பாகுபலி இப்பட்டியலில் அனுஷ்கா, பிரபாஸ் மற்றும் தமன்னா என்று மூவருக்குமே இடம் கொடுத்துள்ளது. ஆம் மலைகளில் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த பாகுபலி அவந்திகாவிற்குதான் இப்பட்டியலில் நான்காம் இடம்.

சல்மான் கான்:

salman

இந்த வயதிலும் உடம்பை பிட் ஆக வைத்து இளைய நடிகர்களுக்கு சவால் விடும் ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ சல்மான் கான். இவருக்கு இப்பட்டியலில் IMDB கொடுத்திருக்கும் இடம் மூன்று.

அமீர் கான்:

aamir

இங்கு நடிப்பிற்கு கமல்ஹாசன் என்றால் அங்கு அமீர்கான் மட்டும்தான். பல கெட்டப், வித்யாசமான கதை மற்றும் களத்தேர்வு, சமூக அக்கறை என்று உலகநாயகன் கமலின் அனைத்து ஆச்சர்யமான விசயங்களையும் அமீர் கானிடம் காணமுடியும். டங்கள் என்னும் ஒரே படத்தின் மூலம் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற புகழை தந்தவர். இவரது வித்யாசமான தொடர் கலை பயணமே இப்பட்டியலில் இவருக்கு இரண்டாம் இடத்தை அளித்துள்ளது.

ஷாருக்கான்:

shahrukh

ஆரம்ப காலங்களில் நடிகர்களுக்கு செக்குரிட்டி வேலை பார்த்தவர், பின்னாளில் தொலைகாட்சி தொடர்களில் நடித்தவர், இன்று பாலிவுட் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக ரசிகர்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்தான். இவருக்கு வயதாவதே இல்லை, என்றும் இளமையுடன் துடிப்பான தனது நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கட்டி வைத்திருப்பவர். இவருக்கு IMDB முதலிடம் கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் அடுத்தப்படம் சிவா அதிரடி பேட்டி.