Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பலநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இமைக்கா நொடிகள் படக்குழு

நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என ஸ்டார் கேஸ்டோடு தொடங்கப்பட்ட இமைக்கா நொடிகள் படம் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், படம் குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அருள் நிதி நடிப்பில் திரில்லர் ஜானரில் வெளிவந்த அந்த படம் தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாக மாறியது. படம் ரிலீஸான பின்னர் சென்னையில் இருக்கும் டிமாண்டி காலனி மக்களிடையே பேமஸானது. அந்த பகுதியில் பேய் இருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவவே, கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த காலனியை இடித்து மக்களின் அச்சம் போக்கப்பட்டது. அந்த அளவுக்கு படம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் அருள் நிதியின் நடிப்பும் பிரமாதமாகப் பேசப்பட்டது.

அந்த படத்துக்குப் பின்னர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்குவதாக அறிவித்தார். கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில் அதர்வா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகிறார். மிரட்டும் வில்லனாக அவர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அவர் கதாபாத்திரம் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதர்வாவின் அக்கா கேரக்டரில் உளவாளியாக நயன் நடித்திருக்கிறார். அவரது கணவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நீண்டநாட்களாக படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ரிலீஸுக்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

முதற்கட்டமாக படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்குப் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். அநேகமாக படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top