fbpx
Connect with us

Cinemapettai

இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்.!

Reviews | விமர்சனங்கள்

இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்.!

‘இமைக்கா நொடிகள்’ திரைவிமர்சனம்.!

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பே படத்தை இயக்கியவர் தான் ஞானமுத்து இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் பல ரசிகர்கள் ஞானமுத்துவின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் அவரின் இரண்டாவது படத்திலேயே முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் அதர்வாவை வைத்து பிரமாண்ட படமான இமைக்காநொடி என்ற திரைபடத்தை கொடுத்துள்ளார். இமைக்கா நொடி கண் இமைக்காமல் பார்க்கும் படி இருந்ததா என பார்க்கலாம்.

imaikka nodikal

படத்தில் நயன்தாரா ஒரு CBI வேலை பார்க்கிறார் படம் முதலிலேயே கொலை நடக்கிறது கலை செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் இந்த விஷயம் நயன்தாராவுக்கு போக நயன்தாரா பணம் கொடுக்காதீர்கள் என கூறியும் பணத்தை கொடுக்கிறார்கள் ஆனால் வழக்கம் போல் பிணம் தான் வீட்டிற்கு வருகிறது.

இதனால் இந்த கேசின் தீவிரத்தை அறிந்த நயன்தாரா களத்தில் குதிக்கிறார் இதில் அதர்வா எப்படி சிக்குகிறார் அனுராக் யார் எதற்க்காக இப்படி செய்கிறார் என்பதை சுவாரசியமாக கூறியுள்ளார் திரைகதை மூலம் இமைக்கா நொடிகள் இயக்குனர்.

நயன்தாராவை வாரம் வாரம் திரையில் பார்த்தாலும் சலிக்கவில்லை என் என்றால் புது புது வித்தியாசமான திரைகதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அதுவும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்தை, அதுவும் படத்தில் CBI அதிகாரியாக மிரட்டி இருக்கிறார், அதே போல் விஜய்சேதுபதியுடன் காதல் ரோமன்ஸ் என கலக்கிவிட்டார் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் நிருபித்துவிட்டார்.

அனுராக் பற்றி சொல்லவே வேணாம் அவர் முதல் தமிழ் படம் என்றாலும் யாராலும் நம்ப முடியாது அப்படி அவர் நடிப்பில் தடம் பதித்துள்ளார் மேலும் சிறந்த இயக்குனர் பாலிவுட்டில் தற்பொழுது சிறந்த நடிகராகவும் பெயர் பெற்றுவிட்டார், அதுவும் அவர் வித்தியாசமாக ரத்தம் உறையாமல் கொலை செய்வது அனைவரையும் மிரளவைக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது. பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

படத்தின் திரைக்கதையும், இரண்டாம் பாதி காட்சியமைப்புகளும் சிறப்பாக உள்ளது. அனுராக் நயன்தாராவிற்கிடையே நடக்கும் விஷயங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள் ஆகியன படத்தின் மிக பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது. படத்தின் அதர்வா, ராஷி கண்ணா காதல் காட்சிகள் தேவையற்றதாகவே தெரிகிறது. 2.50 மணி நேரம் ஓடும் இப்படத்தின் நேரத்தை ஓரளவு குறைத்திருக்கலாம்.

இமைக்கா நொடிகள் கண் இமைக்காமல் பார்க்கவைக்கிறது: 3/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top