புதுடெல்லி : பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, கிரிக்கெட் நிர்வாகிகளின் படங்களை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஒவ்வொரு முறையும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை ஆவலுடனும், ஆக்ரோஷத்துடனும் பார்க்கப்படுகின்றது.இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி, பாகிஸ்தானோடு விளையாடக்கூடாது என ஹிந்து சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தர் அருகே ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கோலி, கிரிக்கெட் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஹிந்து சேனாவின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா தலைமையேற்று நடத்தினார்.

விளையாட்டு என்பதே இரு அணிகளிடையே (நாடுகளிடையே) நட்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது விளையாட்டு வியாபாரம் ஆகிவிட்டது. அதைவிட எதிரணியை எதிரி அணியாக பார்க்கும் மனோபாவமும் உருவாகி வருவது வருத்தமான விஷயமாக பார்க்கப்படுகிறது.