மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறார்.

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையில் இருப்பவர்கள் யாரையும் பற்றி பேசாமல், படத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்

அதிகம் படித்தவை:  தளபதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து... வருத்தத்தில் தளபதியன்ஸ்

அதன்பின் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தமிழ் சினிமா தற்போது மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. ஒருபடம் 25 நாட்கள் கூட ஓடமுடியவில்லை. இந்தப் படத்தின் கதை பிடித்ததால் இதில் நடித்திருக்கிறேன். இதில் ஒரு பாடல் எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறேன். இதுபோல், ‘கவண்’ படத்தில் நடித்தேன். இயக்குனரின் அணுகுமுறை எனக்கு பிடித்தது அதனால் அதில் நடித்து கொடுத்தேன்.

தன்ஷிகாவை கபாலி படத்தின் நாயகி என்று அழைக்கிறார்கள். ‘கபாலி’ படத்திற்கு முன்னாடியே விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்திருக்கிறார்

ரஜினி கூட நடித்ததால், டி.ஆர். பெயர் தெரியாதா,அவருடைய பேச்சில் என்னைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார்” என்று கூறினார். தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை என்று டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்காமல், தொடர்ந்து தன்ஷிகாவை பற்றி பேசியதால், கண்கலங்கினார் தன்ஷிகா.

அதிகம் படித்தவை:  4 வாரத்தில் மெர்சல் செய்த பிரமாண்ட சாதனை.!பிரபல திரையரங்கம் போட்ட அதிரடி டிவிட்.!

இறுதியாக அனைவருக்கும் மேடை நாகரிகம் தெரிய வேண்டும்.. இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர் “‘கபாலி’ படத்தில் ரஜினியோடு நடித்தவுடன் தன்ஷிகா, டி.ராஜேந்தரை மறந்துவிட்டார்.

இது என்னுடைய அட்வைஸாக தன்ஷிகா எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய படத்தில் தன்ஷிகா நடித்தாலும், சின்ன படத்தின் விளம்பரத்திற்கு வந்திருப்பது நன்றி’ என்று கூறினார்.

t rajendar

பிறகு பேசிய அவர் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினேன். எனக்கு விஜய்யை பிடிக்கும். அது வேறு.

நிகழ்ச்சியின் டைட்டிலுக்காகவே பேசினேன். ஆனால் ஆளுங்கட்சியினர் என்னை விஜய்க்கு ஆதரவு தரவில்லை என இன்னும் எச்சரிக்கிறார்கள். நான் யார் சொல்வதையும் கண்டுகொள்ளபோவதில்லை.

ரைடு வந்தார்கள். படத்தை தடுத்தார்கள். ஆனால் படம் வெளியாகாமல் இருந்ததா என்ன? கேட்டுப்பாருங்கள் தயாரிப்பாளரை என அவர் கூறினார்.