புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொறாமையா இருக்கு, இது மாதிரி என்னால பண்ண முடியிலையே! Rj பாலாஜியை பாராட்டிய செல்வராகவன்

முன்னணி இயக்குனராக இருந்தாலும் நடிப்பில் மீது ஈடுபாடு கொண்டு சமீபகாலமாக படங்களில் நடித்து வருபவர் செல்வராகவன். இவர் கடைசியாக இயக்கிய படம் நானே வருவேன். இப்படத்தைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் மார்க் ஆண்டனி, பீஸ்ட், சாணிக் காயிதம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்க வாசல் படத்தில் நடித்துள்ள அவர் இப்படத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்க வாசல். இப்படத்தில் கருணாஸ், நட்டி நட்ராஜ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்வைப் ரைட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சிறைச்சாலை பின்னணியில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரில்லர் ஜர்னலில் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சமீபத்தில், இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி பாராட்டியிருந்தார். இப்படத்தில் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

டிசம்பர் 29ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் ரிலீஸாகும் நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள செல்வராகவன் இப்படத்தைப் பற்றி பேசியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இதுகுறித்து செல்வராகவன் கூறியுள்ளதாவது:

“இப்படத்தின் முழு கதையை ஆரம்பத்திலேயே எனக்கு கொடுத்துவிட்டனர். அதைப் படித்துப் பார்த்த பின், இயக்குனரிடம் இதை நீங்கள் தான் எழுதினீர்களா? என்று கேட்டேன். ஏனென்றால் இதுபோன்ற கதையை எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இதுபோன்ற படத்தை என்னால் எடுக்க முடியவில்லை என்று.

ஜெயிலில் நடப்பது போன்று நிறைய படங்கள் உள்ளன. ஆனால் இப்படத்தின் கதை எனக்குப் பிரமிப்பாக உள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தரும்” என்று கூறியுள்ளார்.

எல்.கே.ஜி படத்தில் இருந்து வித்தியாசமான கதை களத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி சொர்க்க வாசல் படத்தை தேர்வு செய்து நடித்துள்ள நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் செல்வராகவனே பாராட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

- Advertisement -

Trending News