இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அவருக்கு திருமணமாகி மனைவி(23) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வெளிநாட்டில் 8 வருடங்களாக பணிபுரிந்து வந்திருக்கிறார் அந்த இளைஞர். விடுமுறை காலங்களில் இலங்கைக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்தும், அவர்களுக்காக வாங்கி வரும் பொருட்களை கொடுத்தும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த இளைஞரின் மனைவிக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான ஒருவடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

வீட்டில் யாரும் இல்லாததால் அடிக்கடி அந்த இளைஞரின் மனைவியும், திருமணமான வாலிபரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது விவகாரம் வெளிநாட்டில் இருக்கும் இளைஞரின் நண்பர்களுக்கு தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் இளைஞருக்கு போன் செய்து, அவரது மனைவியில் நடத்தை மற்றும் அங்கு நடைபெறுவது குறித்து நண்பர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் என்னால் இப்போது கிளம்பி வர முடியாது. அப்படி நான் வர வேண்டுமானால் எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் போன் செய்தால் மட்டுமே வர முடியும் என்று கூறியுள்ளார்.

நண்பர்களும், இளைஞர் சொன்னபடி அவரது அலுவலகத்திற்கு போன் செய்து அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருக்கிறார். இதனை காரணம் காட்டி வெளிநாட்டிலிருந்து அந்த இளைஞர் கிளம்பி இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கைக்கு வந்தவர் நேராக வீட்டிற்கு செல்லாமல் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்து மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார். அப்போது ஒருநாள் திருமணமான வாலிபர் வீட்டிற்குள் செல்வதை பார்த்த இளைஞர், நேராக சென்று வீட்டு கதவை தட்டியிருக்கிறார்.

கதவை திறந்த மனைவிக்கு அதிர்ச்சி. எதிரே நிற்பது வெளிநாட்டில் இருப்பதாக நினைத்த தனது கணவன். வீட்டிற்குள் சென்று கணவன் பார்த்த போது அந்த திருமணமான வாலிபர் கட்டிலில் படுத்திருந்தார்.

இதனால் மனமுடைந்து போன இளைஞர் செய்த காரியம் வியக்க வைத்திருக்கிறது. மனைவியின் கைகளை பிடித்து அந்த கள்ளக்காதலனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, தனது இருகுழந்தைகளையும் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த பொருட்களையும் கொடுத்துவிட்டு வேறு ஒன்றும் சொல்லாம் சென்றுவிட்டார்.

மேலும் குழந்தைகளில் செலவுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புகிறேன். நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் கூறி சென்றார்.

மனைவிக்கு கள்ளக்காதல் இருப்பது தெரிந்ததும் வெட்டு, குத்து, கொலை செய்யும் காலத்தில் மனைவியை கள்ளக்காதலுக்கு கணவன் தாரை வார்த்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.