Connect with us

Cinemapettai

கள்ளக்காதலனுடன் 40 வயசு டீச்சர்.. கையும் களவுமாக சிக்கியதால் மகள் செய்த காரியம்

illegal-relationship-chennai

Tamil Nadu | தமிழ் நாடு

கள்ளக்காதலனுடன் 40 வயசு டீச்சர்.. கையும் களவுமாக சிக்கியதால் மகள் செய்த காரியம்

நெல்லையில் கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறையில் பூட்டி வைத்து பொதுமக்களிடம் மகள் மாற்றிவிட்டதால் இருவருக்கும் தர்ம அடி கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது ஆசிரியை லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவருக்கு 68 வயது ஆகிறது. அதாவது வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞருடன் ஆசிரியைக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்த ஆசிரியைக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை ஆசிரியையும் அந்த இளைஞரும் வீட்டின் அறையில் இருந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள் அறையை வெளிப்புறமாக பூட்டி அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அங்கு திரண்ட உறவினர்கள் வீட்டின் அறையை திறந்து இளைஞரையும் ஆசிரியையும் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது அந்த டீச்சர்தான் அந்த வாலிபருடன் தான் வாழ விரும்புவதாகவும் என் கணவருக்கும் என் தாய்க்கும் இடையே தகாத உறவு இருந்ததால் திருமணம் செய்து வைத்தனர் என்றும் அதிர்ச்சித் தகவலை கூறினார். மேலும் தன் கணவனுடன் வாழ விருப்பமில்லை என்றும் போலீசாரிடம் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே அந்த இளைஞர் மீது யாரும் போலீசில் புகார் அளிக்காததால் மேலப்பாளையம் போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top