Connect with us
Cinemapettai

Cinemapettai

India | இந்தியா

வாய்ப்பு கிடைக்காமல் விபச்சாரத்தில் தமிழ் பட நடிகைகள்.. போலீசில் கையும் களவுமாக சிக்கி சம்பவம்!

tamil-actress

தமிழ்நாட்டில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு வேலைகளை செய்த பலரும் தற்போது வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்த வறுமையை பயன்படுத்தி பல்வேறு விதமான கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக சினிமா பணியாற்றிவந்த கலைஞர்கள் மற்றும் சிறு சிறு நடிகர்கள் அனைவரும் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். அதனை எப்படி கையாள்வது என தெரியாமல் தற்போது வரை பல நடிகர்களிடமும் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டு வருகின்றனர்.

இந்த வறுமையை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில நடிகைகளை விபச்சார வழக்கில் ஈடுபட வைத்துள்ளனர். தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் தமிழ்பட நடிகைகளை விபச்சார வழக்கில் ஈடுபட வைத்துள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு சில நடிகைகள் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனை வைத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அந்த அடுக்கு மாடி கட்டடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உள்ளே சென்று வந்த நபர் கூறியதன் மூலம் அங்கு விபசாரம் நடப்பது உறுதியாகியுள்ளது. பின்பு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில் இருந்து 2 பெண்களை மீட்டுள்ளனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பெண்களும் தமிழ் திரைப்பட மற்றும் தென்னிந்திய நடிகைகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த இரண்டு பெண்களையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த தவறை ஏன் செய்தீர்கள் என்று கேட்டதற்கு சமீபகாலமாக எந்த பட வாய்ப்புகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை வறுமையில் வாடும் எங்களுக்கு என்ன செய்வதென தெரியாமல் தான் இதை ஏற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.

illegal

illegal

தற்போது 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த 2 தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீஸார் தரப்பில் இருந்து அந்த நடிகைகளின் பெயர்களை தற்போது வரை வெளியிடாமல் உள்ளனர்.

Continue Reading
To Top