• கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகார மாதாபுரத்தை சேர்ந்தவர் ஜான்பால் (32 வயது). பந்தல் தொழிலாளி. இவருடைய மனைவி பொன் இசக்கி(28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மகன் மாயாண்டிக்கும்(27) பொன் இசக்கிக்கு கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

இது தெரிந்த ஜான்பால் மனைவியை இதை கைவிடுமாறு கேட்டுள்ளார். ஆனாலும் கணவருக்கு தெரியாமல் பொன் இசக்கி தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஜான்பால், பந்தல் தொழிலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால் மனைவி பொன் இசக்கியை அழைத்து கதவை திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் கதவு பொன் இசக்கி கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஜான்பால், வீட்டின் பின்பக்கமாக சென்று வாசல் கதவை தட்டியுள்ளார். வீட்டின் உள்ளே இருந்த பொன் இசக்கியின் கள்ளக்காதலன் மாயாண்டி கதவை பூட்டிவிட்டு முன்வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டார்.

கள்ளக்காதலனுடன் தனது மனைவி உல்லாசமாக இருந்ததை அறிந்த ஜான்பால் வீட்டுக்குள் சென்று பொன் இசக்கியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஜான்பால், அரிவாளை எடுத்து, பொன் இசக்கியை சரமாரியாக வெட்டினார். இதையடுத்து பொன் இசக்கி துடி, துடித்து அந்த இடத்திலேயே இறந்தார்.
ஆத்திரம் அடங்கியதும் ஜான்பால் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.