நடிகர் சூரி சினிமாவில் வேகமாக முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். பரோட்டா காமெடியால் பிரபலமானவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என நடித்த படங்களின் காமெடிகள் ஹிட்டாகி விட்டன.

இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். படத்தின் காமெடி காட்சிகளுக்கு சில நாட்கள் தான் கால்ஷீட். இதனால், சூரி குறைந்த நாட்களில் அதிக படங்களில் நடித்து விடுகிறார்.

soori

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் காமெடியனாக சந்தானம் நடித்த நிலையில், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என்மனசு தங்கம் ஆகிய படங்களில் சூரி காமெடியனாக நடித்தார்.

அதிகம் படித்தவை:  புஷ்பா புருஷன் மகன் திரைக்கு வருகிறார்.! அதுவும் முதல் படமே பெரிய இயக்குனருடன்.!

அதையடுத்து இப்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படை வெல்லும் படத்திலும் காமெடியனாக நடித்திருக்கிறார் சூரி.

ஆனபோதும், இந்த படத்தில் அவருக்கு கண்கலங்க வைக்கும் காட்சிகளும் உள்ளதாம். இதுபற்றி சூரி கூறுகையில், தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் நடிப்பது சந்தோசமாக உள்ளது.

அவரது நடிப்பை ஆரம்பத்தில் இரு

Soori
Soori

ந்தே கவனித்து வருகிறேன். மனிதன் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். அதையடுத்து இந்த இப்படை வெல்லும் படத்தில் இன்னும் சூப்பராக நடித்திருக்கிறார். ரொம்ப ஸ்டைலிசான தோற்றத்தில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  சினிமா வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்த...நடிகர்கள் சூரி..முனிஸ்ராஜ்..அப்புக்குட்டி....

ஒரு பாடல் காட்சியில் அவர் தனது கால்களை சுழற்றி எஸ் வடிவத்துக்கு கொண்டு வந்து நடனமாடியிருப்பார். அது அற்புதமாக இருக்கும். அந்தவகையில், ரொம்ப இயல்பாக நடித்திருப்பதோடு நடனமும் ஆடியுள்ளார் உதயநிதி.

Actor Soor

இந்த படத்திலும் நாங்கள் இருவரும் காமெடி காட்சிகளில் அதிகமாக நடித்துள்ளோம். என்றபோதும், இப்படத்தின் கிளைமாக்ஸில் ஓரிரு காட்சிகளில் கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளும் எனக்கு கிடைத்துள்ளது.

அதனால் படம் முழுக்க சிரிக்க வைக்கும் நான் கடைசியில் கண்கலங்க வைத்து விடுவேன். அந்த வகையில், இந்த படத்தில் என்னை காமெடியனாக மட்டுமின்றி குணசித்ர நடிகராகவும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கெளரவ் நாராயணன் என்கிறார் சூரி.