Tamil Cinema News | சினிமா செய்திகள்
இலியானா குண்டானதற்கு இதுதான் காரணமா? அவரே வெளியிட்ட தகவல்
நீண்ட நாட்களாக இலியானா காதலித்து வந்த ஆஸ்திரேலியா போட்டோகிராஃபரை பிரிந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்க தினமும் ஜிம்மே கதியென்று இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இலியானா எப்படி குண்டானார் என்பதைப் பற்றி அவரே சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முடிந்துபோன காதலைப் பற்றி திரும்பத் திரும்ப பேசினாலும் அது கைகூடப் போவதில்லை என்று விரக்தியில் கூறியுள்ளார்.
மேலும் கடந்த வருடம் முழுவதும் சிகிச்சையில் இருந்ததாகவும் ஒரு நாளைக்கு சுமார் 12 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் உடல் பருமன் கூடி விட்டதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் உடலை குறைக்க ஜிம் சென்று வந்தாலும் வழியில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் உலாவ விடுகின்றனர். இதனால் ஜிம் போகும் பழக்கத்தை கைவிட வேண்டியதாயிற்று. தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ileana-fat-images
