டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் காலை விட்டு கலக்கியவர் இடுப்பழகி இலியானா.

இவர் ஆண்ட்ரு நிபோன் என்னும் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வருகிறார். காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் இலியானாவை மனுஷன் வளைத்து வளைத்து புகைப்படங்களாக எடுத்து தள்ளுகிறார்.

Ileana DCruzஇலியானாவும் இதை மறைக்காமல் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிந்துவருகிறார். சமீபத்தில் இருவரும் சேர்ந்து லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இலியானா.

A moment. In a world of madness.

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

இது பற்றி அவரிடம் கேட்ட போது “ஒரு நடிகை காதலை தனது காதலை வெளிப்படையாய் பகிர்ந்தால் பட வாய்ப்புகள் குறைந்து போகும் என்று பலர் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

அவரை பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன் ஏனென்றால் அது அவருடைய சொந்த விஷயம்.ஆனால் என் காதலை பற்றி பகிர எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நான் யாருக்கும் பயப்படவும் இல்லை.” என்று கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எல்லாம் சரி அதென்ன பேரு ஆண்ட்ரு நிபோன்? ஆண்ட்ராய்டு போன் மாதிரி.