இளைய தளபதி படங்களில் இதுவரை பாடல்கள் பெரும்பாலும் ஹிட் அடிக்க தவறியதில்லை. தளபதி பாடல்கள் என்றாலே கட்டாயம் அது ஹிட்தான்.

ஆனால் தொடர்ச்சியாக ஹிட் பாடல்கள் கொடுத்துக் கொண்டிருந்த தளபதிக்கு புதிய கீதை படப்பாடல்கள் சற்று சறுக்கலை தந்ததென்றே சொல்லலாம். அந்த படத்தின் இசையமைப்பாளர் திரு. யுவன் ஷங்கர் ராஜா அவர்கள்.

புதிய கீதை படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. தற்போது இது குறித்து யுவன் சங்கர் ராஜா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

“இளைய தளபதிக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எப்போதும் உண்டு, அதற்காக நான் எப்போதும் தயாராக உள்ளேன், அவர் சம்மதித்தால் எப்போது வேணுமானாலும் பாடல்கள் இசையமைத்து தருவேன். அந்த நல்ல வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.” – இவ்வாறு கூறியுள்ளார்.

யுவனின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.