இளையராஜா என்றால் இசையின் புயல் என்றே சொல்லலாம் அதே போல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹிட் கொடுப்பதில் அடிச்சிக்க ஆளே இல்லை என்று சொல்வார்கள் இளையராஜா பற்றி பேசி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்யாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்யாசம் காட்டப்படுவதில்லை என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நாற்பதோ, ஐம்பதோ பண்ணுவது சுலபம். அவற்றில் எவ்வளவு ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்கவேண்டும்,” என கூறினார்.

ரகுமானின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரகுமானின் இந்த பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.