இளையராஜாவின் பயோபிக்..ஆசைப்படும் யுவன்! ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா

இசைஞானி இளையராஜா சினிமா என்ற எல்லைக்குள் அடங்காதவர் என்றால் அது மிகையாகாது. மேஸ்ட்ரோ அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கவலை, சந்தோசம், காதல், நட்பு, கோபம் என நீங்க எந்த உணர்ச்சியை தேர்ந்தெடுத்தாலும் ராஜாவின் பாடல்கள் உண்டு. சிறு இடத்தில ஆரம்பித்து இன்று கிரீடத்தின் உச்சியில் வைரமாக மின்னுகிறார் இளையராஜா.

தன் அப்பாவின் வாழ்க்கைப்பயணத்தை படமாக்க உள்ள முயற்சியை பற்றி யுவன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இருக்கும் யுவன், தன் அப்பாவிற்காக இயக்குனராகவும் முடிவு செய்துவிட்டார். “RAJA THE JOURNEY” (ராஜா தி ஜர்னி) என இளையராஜாவின் இசை பயணத்தை படமாக்க உள்ளார். மேலும் தனுஷ் தன்னுடைய அப்பாவின் வேடத்தில் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனவும் விரும்புகிறாராம் யுவன்.

Leave a Comment