36 வருடமாக வைரமுத்துவை கிட்ட சேர்க்காத இளையராஜா.. முதல் மரியாதை படத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து

திறமையான இருவர் ஒரு இடத்தில் இருந்தால் பிரச்சனைகளில் தான் முடியும் என்பது இளையராஜா மூலம் அனைவருக்கும் தெரிகிறது. இளையராஜாவுடன் ஆரம்பத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்த பலரும் தற்போது பகைவர்களாக மாறிவிட்டனர்.

இவ்வளவு ஏன் நகமும் சதையுமாக இருந்த இளையராஜாவும் கங்கை அமரனும் இப்போது ஏழாம் பொருத்தமாக இருக்கின்றன. இப்படி இளையராஜா மல்லுக்கட்டாத ஆட்களே கோலிவுட் சினிமாவில் கிடையாது.

பாடல்கள் எழுதுவதில் வல்லவரான வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 36 வருடமாக ஒரு பஞ்சாயத்து உள்ளது. அது இன்று வரையில் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது.

1985ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ராதா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் முதல் மரியாதை. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களும் இன்றும் பலரது ஃபேவரிட் பாடல் லிஸ்டில் உள்ளது.

ilayaraja-vairamuthu-cinemapettai
ilayaraja-vairamuthu-cinemapettai

அந்த படத்தில் பாடல்களை எழுதியவர் நம்ம வைரமுத்துதான். முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற பூங்காத்து திரும்புமா என்ற பாடலில் இடம்பெற்ற மெத்தைய வாங்குன தூக்கத்த வாங்கல என்ற வரி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையாம்.

ஆனால் அது வைரமுத்து மிகவும் ரசித்து எழுதிய வரியாம். இந்த வரிக்கு இசையமைக்க மாட்டேன் என இளையராஜா சொல்ல, வரியை மாற்ற மாட்டேன் என வைரமுத்து சொல்ல இடையில் மாட்டிக்கொண்டு சின்னாபின்னம் ஆகிவிட்டாராம் பாரதிராஜா. இருவருமே அவர்களது தொழிலில் பெரிய ஆட்கள் என்பதால் இருவருக்கும் ஈகோ விட்டுப் போகவில்லை.

அடுத்தடுத்து சில படங்களில் இருவரும் சேர்ந்து பணியாற்றினாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றுவதை நிறுத்திவிட்டனர். ஈகோ பிரச்சினை காரணமாக 36 வருடமாக இருவரும் பேசிக் கொள்வதே இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்