கௌதம் கார்த்திக் புதிய படத்தில் இணைந்த இளையராஜா

gautham-karthik-ilayarajaகௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர். அந்தப் படம் மட்டுமின்றி, அடுத்து நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களும் தோல்வி.

இந்நிலையில், இந்திரஜித், ரங்கூன், சிப்பாய் ஆகிய மூன்று படங்கள் கௌதம் கார்த்திக்கின் கைவசம் இருந்து வருகின்றன!

இந்த படங்களுடன் முத்துராமலிங்கம் என்ற ஒரு படத்திலும் தற்போது கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கவிருக்கிறார். யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இளையராஜா இசை அமைக்கவிருக்கிறார்.  பாலாவின் தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து இளையராஜா இசை அமைக்கும் 1001-ஆவது படம் முத்துராமலிங்கம்.

Comments

comments