குடியரசுத் தினத்தை முன்னிட்டு இளையராஜா அவர்களுக்கு “பத்மவிபூஷண்” விருது வழங்கப்பட்டது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Ilayaraja

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  "இரட்டை இலை விவகாரம்": சசிகலா தரப்புக்கு அவகாசம் வழங்க முடிவு..?
ilayaraja family

இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்… மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி. ”