இசையில் தான் ஞானி ஆனா குணத்தில்.? கர்வம் இல்லை என்பதை கூட கர்வமாக சொல்லும் இளையராஜா

Ilayaraja’s Controversial Speech: ஒரு காலத்தில் எங்கு திரும்பினாலும் இளையராஜாவின் இசை தான் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்போதும் கூட அவருடைய இசைக்கு ரசிகர்கள் அடிமை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இசையில் ஞானி ஆக இருக்கும் இவர் குணத்தில் உயர்ந்தவரா? என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

ஏனென்றால் ஒருவர் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் கர்வத்தோடு மட்டும் இருக்கக் கூடாது. அப்படி தலைகணத்தில் ஆடினால், சேர்த்து வைத்த பெயரும் டேமேஜ் ஆகும் சூழலும் ஏற்படும். இதுதான் இளையராஜாவின் விஷயத்திலும் நடந்து வருகிறது.

இசையில் பல சாதனைகளை படைத்த இவர் தன்னை மீறி யாரும் வளர்ந்து விட்டால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இதை பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசி இருக்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது இசைஞானி ஒரு மேடையில் பேசியிருக்கும் பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: கதையே கேட்காமல் மெட்டு போட்ட இளையராஜா.. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம்

அதில் அவர் ஒருமுறை தீபாவளி சமயத்தில் நான் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு இசையமைத்தேன். ஆனால் இப்போதெல்லாம் யார் அப்படி செய்கிறார்கள். ஒரு வருஷம் வரை ஒரு பாட்டுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதை ரெக்கார்ட் பிரேக் செய்தவர்களும் இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் என் இசையை மக்கள் ரசிப்பதை பார்த்து எனக்கு கர்வம் இருந்தது. ஆனால் இப்போது கிடையாது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவருடைய பேச்சு முழுக்க முழுக்க கர்வமாக மட்டுமே இருந்தது. கர்வம் இல்லை என்பதை கூட கர்வத்தோடு சொன்னவர் இசைஞானி ஆகத்தான் இருப்பார்.

இதைத்தான் இப்போது ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இசை சித்தர் போல் தன்னை நினைத்துக் கொண்டு பேசும் இளையராஜாவுக்கு எதிராக பல கருத்துக்களும் கிளம்பி வருகிறது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. கடைசி வரை இசைஞானிக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் புரியவே புரியாது, கர்வமும் குறையாது.

Also read: இளையராஜா இல்லாமல் கிடைத்த வெற்றி.. சரித்திரத்தையே மாற்றிய பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்