fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தன் பாடல்களுக்கு இளையராஜா கேட்ட ராயல்டி தொகை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ilayaraja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் பாடல்களுக்கு இளையராஜா கேட்ட ராயல்டி தொகை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீப காலமாக இளையராஜா அவரது பாடல்களை ஒலிபரப்புவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் எக்கோ மியூசிக், அகி மியூசிக், கிரி ட்ரேடர்ஸ் போன்ற பல நிறுவனங்களும் பாடல்களை ஒளிபரப்புவதற்கு இளையராஜாவிடம் உரிமையை பெற்றுள்ளனர்.

அதனால் அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்திடம் நாங்கள் இளையராஜாவிடம் பாடல் உரிமையை பெற்றுள்ளோம். பாடல்களைப் பயன்படுத்த கூடாது என இளையராஜா கூறியதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் தெரிவித்தனர். கடந்த ஆண்டு வந்த இந்த வழக்கை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது என்றும் அவரிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. மேலும் இளையராஜா ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் அதற்கு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

அதனால் பலரும் இளையராஜா மீது வெறுப்பில் உள்ளனர். ஒரு கலைஞன் தன் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அன்பை பெற வேண்டும். இப்படித் தலைக்கனமாக நடந்து கொள்ளக்கூடாது என கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top