வெள்ளி விழா கண்ட இசைஞானியின் 100-வது படம்.. 17 வயது தேசிய விருது நடிகையின் கடைசி படமும் அதுதான்

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இசைஞானி இளையராஜா, இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர்.

இவருடைய 100-வது படம் தான் பிரபல நடிகையின் கடைசி படமும் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது 1980 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன், ஷோபா இணைந்து நடித்திருக்கும் மூடுபனி என்கிற திரில்லர் திரைப்படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

Also Read: இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

இந்தப் படம் தான் இளையராஜாவின் 100-வது படம் என சில்வர் ஜூப்ளி கொண்டாடினர். இந்த படத்தில் இடம்பெற்ற அத்துணை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதை வருடி செல்கிறது. இந்த பாடலுக்கு கங்கை அமரன் வரிகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தென்னிந்திய நடிகை ஷோபா தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன்பிறகு மலையாளத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து பிறகு தமிழில் 17 வயதில் பசி என்கின்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Also Read: இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

அதுமட்டுமின்றி பசி படத்திற்காக நடிகை ஷோபாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய 17-வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இறப்புக்கான காரணம் இன்றளவும் தெரியாத கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இப்படி மூடுபனி படத்தின் மூலம் இளையராஜா சில்வர் ஜூப்ளி கொண்டாடியதும், அந்தப் படம் தான் ஷோபாவின் கடைசி படம் என்பதால் தமிழ் சினிமாவின் மூடுபனி மறக்க முடியாத படமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் கதாநாயகன் பிரதாப் போத்தன் சமீபத்தில் தான் காலமானார்.

Also Read: 2022-ல் திடீரென்று மரணித்த 5 சினிமா பிரபலங்கள்.. காலத்தால் மறக்க முடியாத படங்களை தந்த பிரதாப் போத்தன் மறைவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்