கமல் ஹாஸன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்துக்கான இசையமைப்பு வேலையைத் தொடங்கினார் இளையராஜா. இளையராஜா – கமல் ஹாஸன் கூட்டணியில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இனிய பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் மும்பை எக்ஸ்பிரஸ்.

இப்போது மீண்டும் இருவரும் சபாஷ் நாயுடு படத்துக்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் காமெடிக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கான இசையமைப்பு வேலையை நேற்று தொடங்கினார் இளையராஜா. முதல் பாடலை ரம்யா என்எஸ்கே, விஷால் தத்லானி பாடினார்கள்.

இளையராஜா அனைத்துப் பாடல்களையும் இன்னும் ஓரிரு தினங்களில் முடித்துவிடுவார் என்றும் அதன் பிறகுதான் கமல் ஹாஸன் அமெரிக்காவுக்கு படப்பிடிப்புக்குச் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.