‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

Naachiyar Teaser

இந்தப் படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் கிரிமினலாக நடித்துள்ளனர்.

ஏற்கெனவே பல பாடல்களை பாடியுள்ள ஜி.வி.பிரகாஷ், தான் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்திற்காக இளையராஜா இசையில் ஒரு டூயட் பாடலை பாடியுள்ளார்.  நேற்று ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டரில் இந்த பதிவை போட்டார்.

அதிகம் படித்தவை:  கௌதம் மேனன் இயக்கத்தில் மிண்டும் நடிப்பிர்களா? சூர்யாவின் பதில்

“என் வாழ்வில் மிக முக்கியமான நாள். மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் அழகான டூயட் பாடல். ப்ரியங்காவுடன், நாச்சியார் படத்துக்காக.
உன்னை விட்டால் யாரும் இல்லை.”

உன்னை விட்டால் யாரும் இல்லை என்று தொடங்கு இப்பாடலை டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இளையராஜாவுடன் முதன் முதலாக இணைந்து இப்பாடலை பாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  வசமாக மாட்டிக்கொண்ட வார்னர்: பழி தீர்ப்பாரா காம்பீர்?

இந்தப் படத்தின் டீஸரை, நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த டீஸர்.