fbpx
Connect with us

Cinemapettai

பாடலுக்கு காசு கேட்பதா?: இளையராஜாவைப் பார்த்து “சீ” என்ற கங்கை அமரன்!

gangai-amaran-and-illayaraja

பாடலுக்கு காசு கேட்பதா?: இளையராஜாவைப் பார்த்து “சீ” என்ற கங்கை அமரன்!

இசை அமைப்பாளர் இளையராஜா தன்னோட பாடலை பாட வேண்டும் என்றால் முன் அனுமதி பெறவேண்டும் என்று பாடலாசிரியர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளதாவது: இசை என்பது மக்களுக்காக படைத்து விடப்பட்டு விட்டது. எனவே அதற்கு காப்புரிமை கேட்பது மடத்தனமானது என்று இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பாடலுக்கு இசை அமைத்தற்காக பணத்தை ஏற்கெனவே பெற்றுவிட்டு திரும்ப காப்புரிமை பெறவேண்டும் என்று கூறுவது சரியானது இல்லை.

மேடை கலைஞர்கள் பாடுவது அவர்களின் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களிடம் பணத்தை எதிர்பார்ப்பதா, ச்சீ இது கேவலம் என்றார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை அமரன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top